வலுக்கட்டாயமாக உடலுறவு... தவறானவர் என சித்தரிப்பு: பாஜக பிரமுகரின் செயலால் உயிரை மாய்த்த பெண் நிர்வாகி

வலுக்கட்டாயமாக உடலுறவு... தவறானவர் என சித்தரிப்பு: பாஜக பிரமுகரின் செயலால் உயிரை மாய்த்த பெண் நிர்வாகி

``தன் மரணத்திற்கு, சக பாஜக நிர்வாகியே காரணம்'' என பாஜகவின் பாலக்காடு தொகுதி பெண் பொருளாளர் எழுதிவைத்திருக்கும் கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலக்காடு சட்டமன்றத் தொகுதியின் மகளிரணி பொருளாளராக இருந்தவர் சரண்யா ரமேஷ் (27). இவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கடைசியாக வாக்குமூலமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதைக் கைப்பற்றிய பாலக்காடு போலீஸார் அதன் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். அந்தக் கடிதத்தில் அதேபகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பிரஜீவ் என்பவர்தான் தன் மரணத்திற்குக் காரணம் என எழுதிவைத்துள்ளார்.

சரண்யா தற்கொலைக்கு முன்பு பிரஜீவிற்கு வாட்ஸ் அப்பில் வீடியோகாலும் செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் பிரஜீவ் பலமுறை வலுக்கட்டாயப்படுத்தி சரண்யாவுடன் உடலுறவு கொண்டதும், கடைசியில் சரண்யாவை தவறான பெண் போல் வெளியில் சித்தரித்ததும்தான் தற்கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்தது. போலீஸார் தன்னை நெருங்குவதைத் தெரிந்த பிரஜீவ் தலைமறைவானார்.

இந்நிலையில் இவ்விவாகரம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் பாஜகவின் பாலக்காடு மாவட்டத் தலைவர் கே.எம்.ஹரிதாஸ், “பிரஜீவ் ரயில்வே ஊழியர். பாஜகவின் அனுதாபி அவ்வளவுதான். அவருக்கு பெரிய பொறுப்புகள் எதுவும் இல்லை”என்றார். ஆனால் உயிரிழந்த சரண்யாவின் தந்தை ராஜன், “பிரஜீவ் பாஜகவில் நிர்வாகியாகவே உள்ளார். அதன் அடிப்படையில் தான் என் மகளும், பிரஜீவும் நெருங்கி பழகினர். இவ்விசயத்தில் கட்சியும் எங்களுடன் துணை நிற்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in