பாஜக நிர்வாகி ஜெமீன்.
பாஜக நிர்வாகி ஜெமீன்.

சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலினை அவதூறு செய்து வீடியோ: பாஜக நிர்வாகியைத் தட்டித்தூக்கிய போலீஸ்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

திமுகவின் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், வழக்கறிஞருமான தாமரை பாரதி தென் தாமரைக்குளம் காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், “ஏழுசாட்டுப்பத்து ஊரைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகன் ஜெமீன்(33) என்பவர் தன் சமூகவலைதளப் பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரையும் மிக மோசமான முறையில் பேசி வெளியிட்டுள்ளார். அத்துடன் கொலை மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசியுள்ளார்.

தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்வகையில் ஜெமீனின் செயலும், பதிவுகளும் அமைந்துள்ளது. இவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.”எனப் புகார் கொடுத்திருந்தார். மேலும், இதில் ஜெமீன் மூலம் அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட், அவரது ஆடியோ, வீடியோ அடங்கிய டிவிடி ஆகியவற்றையும் சமர்பித்தார்.

இதனை ஆய்வு செய்த போலீஸார் ஜெமீனை இன்று மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெமீன் கோவளம் ஊராட்சியில் பாஜக நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in