‘ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்க’ -திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் பாஜக!

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி திமுகவின் ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்ய பாஜக கோரிக்கை

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதாக ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பாஜகவினர் உயிருடன் இருக்கமுடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். ஏற்கனவே சட்டமன்றத்தில் கொலை நடந்தாலும் வழக்கு தொடுக்க முடியாது என ஆளுநருக்கு எதிராக மிரட்டல் விடுத்தார் ஆர்.எஸ்.பாரதி. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் மவுனம் காக்கிறார். இப்போது, பாஜகவினரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி உள்ள ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்ய வேண்டும்.

தான் ஆளும்கட்சியை சேர்ந்தவர் என்பதையே சாதகமாக எடுத்துக்கொண்டு வன்முறைத் தூண்டும் விதத்தில் தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதி பேசி வருகின்றார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மிரட்டல்களை முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது அரசு நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியாத காரணத்தால் தான்! இதையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்கெடுக்க ஆளும் திமுகவே முயற்சி செய்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்யப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in