அபார வெற்றி: துணை ஜனாதிபதியாகிறார் பாஜக வேட்பாளர் ஜக்தீப் தங்கார்!

அபார வெற்றி:  துணை ஜனாதிபதியாகிறார் பாஜக வேட்பாளர் ஜக்தீப் தங்கார்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்கூட்டணியின் வேட்பாளர் ஜக்தீப் தங்கார் அபார வெற்றிபெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் மொத்தம் பதிவான 725 வாக்குகளில் 528 வாக்குகளை ஜக்தீப் தங்கார் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளை மட்டுமே பெற்றார். 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக 346 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மையான வாக்குகளை கைப்பற்றி ஜக்தீப் தங்கார் அபார வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் 39 எம்.பிக்களை வைத்திருக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாக்களிக்கவில்லை.

நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜக்தீப் தங்காரின் பதவியேற்பு விழா வரும் ஆகஸ்ட் 11-ம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் வாக்களித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in