பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை: பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்

நாகூர் கனி.
நாகூர் கனி.

மக்கள் நடமாட்டம் நிறைந்த அரும்பாக்கம் பகுதியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கம் ஆசாத் நகரைச் சேர்ந்தவர் நாகூர்கனி(33). இவர் அயனாவரம் மார்க்கெட் சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வந்தார். இன்று இரவு நாகூர்கனி கடையில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல், நாகூர்கனியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனே அயனாவரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீஸார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நாகூர் கனியின் உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளைத் தேடிவருகின்றனர். மேலும் நாகூர்கனி கொலைக்கான காரணம் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இக்கொலையால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in