கேரளத்தில் பரவும் பறவைக்காய்ச்சல்: தமிழக எல்லையோரப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு

எல்லையில் கிருமி நாசினி தெளித்த பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்
எல்லையில் கிருமி நாசினி தெளித்த பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்

கேரளத்தில் பறவைக்காய்ச்சல் நோய் மிகவும் தீவிரமாக பரவிவருகிறது. இந்நிலையில், கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பிற்கு பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

கேரளத்தில் பறவைக்காய்ச்சல் நோய் எதிரொலியாக அண்மையில் ஆயிரத்திற்கும் அதிகமான வாத்துகள் அடுத்தடுத்து இறந்தன. இதனால் கேரளத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பிற்கு பின்பே அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழக சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி தமிழக - கேரள எல்லையோர நுழைவுப்பகுதிகளைக் கொண்டிருக்கும் தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இன்று காலையில் தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச் சாவடியில் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள் கேரளத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து அதன் பின்னரே உள்ளே அனுமதித்தனர். இதேபோல் எல்லையோரப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து எல்லையோரப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in