மின்சாரம் வாங்க, விற்க தமிழ்நாட்டுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

மின்சாரம் வாங்க, விற்க தமிழ்நாட்டுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களின் மின்பகிர்மான நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 5,083 கோடி ரூபாய் பாக்கியை செலுத்த தவறியதால் மின்சாரம் வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துடன் ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, பீகார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், மணிப்பூர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களும் இந்த தடையை சந்தித்துள்ளன.

பாக்கித் தொகைக்கான பில் தயாராகி இரண்டரை மாதங்கள் அவகாசங்கள் அளித்தும் இந்த தொகை மாநிலங்களால் செலுத்தப்படவில்லை. இதனால் மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கிரிட் ஆபரேட்டரான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (POSOCO), செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை செலுத்தாததற்கு அபராதமாக 13 மாநிலங்கள் சந்தையில் மின்சாரம் வாங்க மற்றும் விற்பதற்கு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலமாக சந்தையில் இருந்து குறுகிய கால மின்சாரத்தை வாங்குவதற்கும், அதன் பிறகு நடுத்தர மற்றும் நீண்ட கால மின்சார அடிப்படையில் மின்சாரம் வாங்கவும் முழுமையான தடையை ஏற்படும்.

ஒட்டுமொத்தமாக இந்த மாநிலங்கள் ரூ. 5,083 கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் அதிகபட்சமாக தெலுங்கானா ரூ.1,380 கோடியும், தமிழ்நாடு ரூ. 926 கோடியும், ராஜஸ்தான் ரூ. 501 கோடியும் பாக்கி வைத்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in