நள்ளிரவில் நடுரோட்டில் ஆபத்தான முறையில் பைக் வீலிங்: இளைஞரின் வீடியோ வைரல்

நள்ளிரவில் நடுரோட்டில் ஆபத்தான முறையில் பைக் வீலிங்: இளைஞரின் வீடியோ வைரல்

சென்னையில் நேற்று நள்ளிரவில் ஆபத்தான முறையில் டூவீலரில் வீலிங் செய்யும் இளைஞரின் காணொலி வைரலாகி வருகிறது.

சென்னையில் ஆபத்தான முறையில் டூவீலரில் இரவு நேரங்களில் சாகசம் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இப்படி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அதனை மீறி அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் ஆபத்தான முறையில் இளைஞர்கள் டூவீலர்களில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை தேனாம்பேட்டையில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரை ஆபத்தான முறையில் இளைஞர் குழுவினர் அதிவேகமாக பைக் ஓட்டி வீலிங் செய்தனர். இதில் ஒரு இளைஞர், டூவீலரின் முன் சக்கரத்தைத் தூக்கியவாறு ஆபத்தான முறையில் வீலிங் செய்தார். இதனால் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த காட்சிகளை வைத்து பாண்டி பஜார் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார், அந்த டூவீலர்களின் எண்களைக் கொண்டு ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர்களைத்தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in