நடுவழியில் ரிப்பேரான திருட்டு பைக்... போராடி சரி செய்த கொள்ளையன்: மதுரையில் நள்ளிரவில் நிகழ்ந்த‌ சுவாரஸ்யம்

பரிதவித்த திருடன்
பரிதவித்த திருடன்

நள்ளிரவில் திருடப்பட்ட பைக் இடையிலேயே நின்றதால் பதறிப் போய் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் வாகனத்தை இயக்கி, திருடிச் சென்ற சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது.

மதுரையில் நாளுக்கு நாள் இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போகின்றது. இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் காம்பவுண்டின் உள்ளே நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நள்ளிரவு மூன்று மணி அளவில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி ஓட்டிச் சென்றுள்ளார். நன்றாக ஓடிக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் பாதியில் திடீரென நின்றுள்ளது. இதனால், பரிதவித்துப் போன திருடன் போராடி ஒரு வழியாக மீண்டும் வாகனத்தை இயக்கி அதனை ஓட்டிச் சென்றுள்ளார்.

இக்காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in