தீப்பொறி பறக்க 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பைக்: அதிவேகத்தில் காரை இயக்கிய ஓட்டுநர் கைது

தீப்பொறி பறக்க 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பைக்:  அதிவேகத்தில் காரை இயக்கிய ஓட்டுநர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தீப்பொறி பறக்க பைக்கை 1 கி.மீ காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இரண்டு பைக்குகள் கார் மீது மோதின. அப்போது அதில் ஒரு பைக், அந்த காரின் பின்புறம் சிக்கிக் கொண்டது. அந்த பைக்கை 1 கி.மீ தூரத்திற்கு கார் ஓட்டுநர் தீப்பொறி பறக்க அதிவேகத்தில் இழுத்துச் சென்றார். இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நடந்த இச்சம்பவத்தை வாகனத்தில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " காஜியாபாத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் வந்தவர், வாகனத்தை நிறுத்தச் சொல்லி கதறியும் காரை நிறுத்தாமல் ஓட்டுநர் இயக்கியுள்ளார். மற்றொரு பைக்கில் வந்தவரும் காரில் இருப்பவரிடம் பைக் சிக்கியுள்ள விவரத்தை் விடாமல் விரட்டிச் சென்று கூறியுள்ளார். ஆனால், கார் ஓட்டுநர் அதைப் பற்றி கவலைப்படாமல் 1 கி.மீ தூரத்திற்கு காரை இழுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து விசாரணை நடத்தி கார் ஓட்டுநரை கைது செய்துள்ளோம்" என்றனர். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்ற தகவலை காஜியாபாத் போலீஸார் ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in