முந்திச் செல்ல முயன்றபோது வந்த ஆட்டோ... எதிரே வந்த வேன் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்: பதை பதைக்கும் சிசிடிவி வெளியானது!

முந்திச் செல்ல முயன்றபோது வந்த ஆட்டோ... எதிரே வந்த வேன் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்: பதை பதைக்கும் சிசிடிவி வெளியானது!
சிசிடிவி காட்சி

பழனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது வேன் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்(21). அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மனோஜ் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பழனி அரசு மருத்துவமனையின் பின்பக்க நுழைவாயில் அருகே சென்று கொண்டிருந்தார்.

படுகாயமடைந்த மனோஜ்
படுகாயமடைந்த மனோஜ்

அப்போது, முன்னே சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். இதில், எதிரே வந்த டூரிஸ்ட் வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் மனோஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, மனோஜை மீட்ட அக்கம்பக்கத்தினர் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது வேன் மோதும் சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in