10 லட்சத்துடன் வந்த முதலாளி; கொடூரமாக கொன்ற தொழிலாளிகள்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

10 லட்சத்துடன் வந்த முதலாளி; கொடூரமாக கொன்ற தொழிலாளிகள்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

பணத்துக்காக முதலாளியை பிஹாரை சேர்ந்த தொழிலாளர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இந்த கொடூர சம்பவம் சேலம் மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர், தனது நண்பரான சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருடன் சேர்ந்து தீவட்டி பட்டியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். அந்த கடையில் பிஹாரைச் சேர்ந்த இரண்டு வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி இரவு சந்தோஷும், பிரேம்குமாரும் 10 லட்ச ரூபாய் பணத்துடன் கடையை பூட்டிக்கொண்டு வெளியேறி இருக்கின்றனர். அப்போது, பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் கடையின் வெளிக்கதவை மூடிவிட்டு கத்தியுடன் காத்திருந்தனர்.

அப்போது, வெளியே வந்த இருவர் மீதும் சரமாரியாக பிஹார் தொழிலாளர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சந்தோஷ் தான் வைத்திருந்த ஹெல்மெட்டாலும், பிரேம்குமார் கல்லாலும் அவர்களை தாக்கியுள்ளனர். அதே நேரத்தில் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொழிலாளர்கள் இரண்டு பேர் முதலாளியை கொலை செய்யும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது. கொலையாளிகளில் ஒருவன் 17 வயதுடைய சிறுவன் என்பது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in