விபத்தில் சிக்கிய இந்திய பயிற்சி விமானம்!- தப்பிய விமானிகள் (வீடியோ)

விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம்
விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம்ANI

பிஹார் மாநிலம், கயாவில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்தது. பயிற்சி விமானத்தில் இருந்த 2 விமானிகளும் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.

இந்திய விமானப்படையின் பயிற்சி அகாடமி பிஹார் மாநிலம் கயாவில் உள்ளது. இங்கு, விமானிகள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் இன்றும் விமானப்படை விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிராம் அருகே விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த விமானிகள் 2 பேர் உயிர் தப்பினர்.

இந்த விபத்தை பார்த்த கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களின் செயலை விமானப்படை அதிகாரிகள் பாராட்டினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in