நாட்டிலேயே முதல் முறையாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு - விவரங்களை வெளியிட்டது பீகார் அரசு

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் பிரிட்டிஷார் காலத்தில் சாதி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே இந்நாள் வரை இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் பின்னர் பல ஆண்டு காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்தது.

இதன்பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் அந்த புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை என பாஜக அரசு தெரிவித்தது. இதுகுறித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்

மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்நிலையில், பீகாரில் ஆளும் ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. தற்போது, பீகார் அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி என்றும் அதில் பிற்படுத்தப்பட்டோர் 27.13%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, பிற்படுத்தப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 63.14%, பொதுப் பிரிவினர் 15.52% தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in