
பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களும், பயன்படுத்தப்பட்ட மதிய உணவு தானியங்களின் சாக்குகளை தலா 20 ரூபாய்க்கு விற்குமாறு பீகார் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களும், பயன்படுத்தப்பட்ட மதிய உணவுக்கான தானியங்கள் கொண்டுவரும் சாக்குகளை தலா 20 ரூபாய்க்கு விற்குமாறு பீகார் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையால் ஆசியர்கள் கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அனைத்து மாவட்ட மதிய உணவுத் திட்ட அலுவலர்களுக்கு எழுதிய ஆகஸ்ட் 14, 2023 தேதியிட்ட கடிதத்தில் பீகார் மதிய உணவு இயக்குநர் மிதிலேஷ் மிஸ்ரா, “மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்க தானியங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு, காலி சாக்குகள் விற்கப்படுகின்றன. மாநில திட்ட நிதியை நிர்வகிப்பதற்காக இயக்கப்படும் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் விற்பனை வருவாயை டெபாசிட் செய்ய வேண்டும்” என உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, மதிய உணவுத் திட்டத்திற்காக உணவு தானியங்களை வழங்கப் பெறப்பட்ட சாக்குகளின் விலை தலா ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது.