வாழ்க்கையின் அடுத்த கட்டம் 'பிக்பாஸா?': விஜே அர்ச்சனாவிற்கு வினா எழுப்பும் ரசிகர்கள்

வாழ்க்கையின் அடுத்த கட்டம் 'பிக்பாஸா?': விஜே அர்ச்சனாவிற்கு வினா எழுப்பும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகியுள்ள நடிகை விஜே அர்ச்சனா, 'பிக்பாஸ் 6' நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக சொல்லப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் 'ராஜா ராணி'. முதல் சீசன் வெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா நடித்து வந்தார் . அவரின் துடிப்பான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் இவர் இந்த தொடரில் இருந்து திடீரென விலகிக் கொண்டார். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொள்வதாக அர்ச்சனா தெரிவித்திருந்தார். இதனால் அவர் சினிமா எதிலும் நடிக்கப் போகிறாரா என கேள்வி எழும்பியது.

இந்த நிலையில் அர்ச்சனா அளித்த ஒரு பேட்டியில், " பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேனா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என தெரிவித்துள்ளார். இவர் இப்படி ட்விஸ்ட் வைத்து பேசி இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்று சொன்னது பிக்பாஸா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in