பிக்பாஸ் அசீமின் அநாகரிகச் செயல்: 'ரெட் கார்டு' கொடுக்கப்படுமா?

பிக்பாஸ் அசீமின் அநாகரிகச் செயல்: 'ரெட் கார்டு'  கொடுக்கப்படுமா?

பிக்பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளரான அசீமிற்கு 'ரெட் கார்டு' கொடுக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே போட்டிகள், வாக்குவாதம், சண்டை என பஞ்சாயத்துக்குப் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

அதில் நேற்று நடந்த வாக்குவாதம் பிக்பாஸ் சீசன்6-ல் உச்சம் என்றே சொல்லலாம். பிக்பாஸ் சீசனின் கடையில் தான் போட்டியாளர்களுக்கு ரேங்க்கிங் டாஸ்க் என்பதைக் கொடுப்பார் பிக்பாஸ். ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்து 12 நாட்களே ஆகியிருக்கும் நிலையில் இந்த டாஸ்க்கை கொண்டு வந்து போட்டியாளர்கள் மத்தியில் வாக்குவாதத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார் பிக்பாஸ்.

கதை சொல்லும் டாஸ்க் மூலம் ஃப்ரீ ஜோனுக்கு எட்டு போட்டியாளர்கள் செல்ல, மீதமுள்ள போட்டியாளர்கள் மத்தியில் இந்த ரேங்க்கிங் டாஸ்க் ஆரம்பித்தது . இதில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கள் அடுத்த வாரம் தலைவர் பதவி போட்டிக்கு நேரடியாகச் சென்று நாமினேஷனில் இருந்தும் தப்பிக்கலாம்.

இதில், அசீமிற்கு கடைசி இடம் கிடைக்க ஆயிஷா, விக்ரமன், மகேஸ்வரி போன்றவர்களை டார்கெட் செய்து ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தார். குறிப்பாக ஆயிஷாவை ‘வாடி, போடி’ என பேச ஆரம்பித்ததும் ஆயிஷா அதைக் கண்டித்து சண்டைக்கு வர இருந்தும், விடாமல் அப்படியே அநாகரிகமான உடல் மொழியோடு அசீம் அப்படியே பேசி வர ’செருப்பாலயே அடிப்பேன்’ என எகிறினார் ஆயிஷா.

இதைக் கண்டித்த விக்ரமன் உள்ளிட்ட சில போட்டியாளர்களையும் மரியாதைக் குறைவாக பேசியது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கும் விதமாக அமைந்தது. இது போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவர்களை பிக்பாஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்பது நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஒன்று. இதையே பார்வையாளர்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தாகப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வார இறுதி எபிசோட்டில் நடிகரும் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கமல்ஹாசன், அசீமை கண்டிக்க வேண்டும் என்பதே பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in