அக்.2-ல் தொடங்குகிறது 'பிக்பாஸ்' 6: நடிகர் கமல்ஹாசனுக்கு சம்பளம் 75 கோடி?

அக்.2-ல் தொடங்குகிறது 'பிக்பாஸ்' 6: நடிகர் கமல்ஹாசனுக்கு சம்பளம் 75 கோடி?

'பிக்பாஸ்' 6 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்ற 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 'பிக்பாஸ்' 2 தொடங்கி அடுத்தடுத்த கட்டத்திற்கு இந்த நிகழ்ச்சி சென்றது. நூறு நாட்கள் ஒரே வீட்டில் பங்கேற்பாளர்கள் தங்க வேண்டும். அங்கு நடத்தப்படும் போட்டிகளில் வென்று கடைசியாக வெல்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

தற்போது 'பிக்பாஸ்' 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த 'பிக்பாஸ்' 6- நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், விஜே. ரக்சன், ஜாக்லின், பாடகி ராஜலட்சுமி, நடிகை கிரண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் 2-ம் தேதி முதல் தேதியில் இருந்து 'பிக்பாஸ்' 6 நிகழ்ச்சி தொடங்க உள்து.

இந்த நிலையில், இந்த 'பிக்பாஸ்' 6 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே நடந்து முடிந்த 'பிக்பாஸ்' 5 நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் 55 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in