பகத்சிங் வேடமணிந்து நாடக ஒத்திகை: தூக்குக் கயிற்றில் சிக்கிய மாணவன் உயிரிழந்த சோகம்

பகத்சிங் வேடமணிந்து நாடக ஒத்திகை: தூக்குக் கயிற்றில் சிக்கிய மாணவன் உயிரிழந்த சோகம்

கர்நாடகா உதயமான தினத்தை ஒட்டி பள்ளியில் நடந்த நாடக ஒத்திகையில் மாணவன் கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தனியார் பள்ளியில் நாடக ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் 7-வகுப்பு படித்து வந்த சஞ்சய் கௌடா என்ற மாணவன் பகத்சிங் வேடம் அணிந்தார். நாடகத்தில் நடிப்பதற்காக மாணவர் ஒத்திகை பார்த்தார். அப்போது தூக்கு கயிறு மாணவன் கழுத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகத்சிங் வேடமணிந்த மாணவர் நாடக ஒத்திகையின் போது தூக்குக் கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in