பெண்களும் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களுக்குச் செல்லலாம்: ஜெர்மனி நகரில் அனுமதி

நீச்சல் குளம்
நீச்சல் குளம்பெண்களும் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களுக்குச் செல்லலாம்: ஜெர்மனி நகரில் அனுமதி

ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் பாலின வேறுபாடின்றி, பெண்களும் பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பெர்லினின் பொதுக் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண், பாகுபாட்டின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பெர்லினில் மேலாடையின்றி பொதுக் குளத்தில் நுழைந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பெண் சட்டரீதியாக புகாரைப் பதிவு செய்தார். மேலும் அவர் பெர்லின் செனட் அலுவலகத்தில், ஆண்களைப் போலவே பெண்களும் மேலாடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் தேர்வு செய்தால், உடல்களை மூடிக்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து பார்வையாளர்களும் மேலாடையின்றி குளங்களுக்குள் நுழைய உரிமை வேண்டும் என்றும் அவர் கூறினார். செனட் அதிகாரிகளும் இந்த பாகுபாட்டை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து புதிய குளியல் விதிகளின்படி, பெர்லின் நிர்வாகம் பாலின பாகுபாடு இல்லாமல் அனைவரும் தங்கள் உடற்பகுதியை மறைக்காமல் உள்ளே செல்ல அனுமதித்தது. பெர்லின் நகரின் பொதுக் குளங்களை இயக்கும் பெர்லின் பேடர்பெட்ரீப் நிர்வாகம், அதன் சமீபத்திய ஆடை விதிகளில் இதனை அறிவித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in