சுகாதாரப்போட்டியில் பெங்களூரு அக்ரஹார சிறைக்கு முதலிடம்: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

சுகாதாரப்போட்டியில் பெங்களூரு அக்ரஹார சிறைக்கு முதலிடம்: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றிருக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்குச் சென்று சிறைகளின் நிலைகள், சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக அதிகாரிகள் சிறந்த சிறைகளுக்குப் பரிசுகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 6-வது அனைத்து இந்திய சிறைகளுக்கான சுகாதார போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் 1,319 சிறைககளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசை வென்றது.

அதுபோல், ஆந்திராவில் உள்ள மத்திய சிறைக்கு இரண்டாவது பரிசும், தமிழ்நாடு மத்திய சிறைக்கு மூன்றாவது பரிசும் கிடைத்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமைக் கண்காணிப்பாளர் பி.எஸ்.ரமேஷ் கூறுகையில், “பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர். அப்போது கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் இடம், கைதிகள் உடல்நிலையைப் பராமரிப்பது, சிறையின் பாதுகாப்பு என அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறையில் உள்ள கோப்புகளையும் அந்த குழு ஆய்வு செய்தது. அந்த குழுவினருக்கு ஏற்பட்ட திருப்தி காரணமாக பரப்பன அக்ரஹாரா இந்தியாவின் சிறந்த சிறையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு கிடைத்து உள்ளது ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in