மதுரை இனி போகவேண்டாம்: நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்மதுரை இனி போகவேண்டாம்: நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு

குமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பெட் சிட்டி ஸ்கேன் வசதி நெல்லை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புற்றுநோயைக் கண்டு அறியும் அதி நவீன ஸ்கேன் கருவியான பெட் சிட்டி ஸ்கேன் வசதி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த வசதியைப் பயன்படுத்த மதுரை அரசு மருத்துவமனை வரை செல்ல வேண்டி இருந்தது.

தற்போது இந்த வசதி திருநெல்வேலியிலேயே வந்து இருப்பதால் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்ட மக்களுக்கு பயன்படும். இந்தக் கருவியின் மதிப்பீடு 12 கோடி ஆகும்.

இதேபோல் நெல்லை அரசு மருத்துவமனையில் 23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சைக் கட்டிடமும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 708 நகர்ப்புற சுகாதார நிலையங்களை காணொலி மூலம் தொடக்கிவைக்க உள்ளார் ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in