பிளாட்பாரத்தில் தூங்குவதில் போட்டி:எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்துக்கொலை

பிளாட்பாரத்தில் தூங்குவதில் போட்டி:எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்துக்கொலை

சென்னை வடபழனியில் பிளாட்பாரத்தில் தூங்குவதில் ஏற்பட்ட மோதலில் எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வேதஜார்ஜ். இவர் வடபழனி பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். வேலையை முடிந்ததும் வீட்டிற்குச் செல்லாமல் அந்த பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் இரவு பிளாட்பாரத்தில் தூங்குவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் ஜேம்ஸ்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாய்த்தகராறு முற்றி கைத்தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் அருகில் இருந்த கட்டையைக் கொண்டு ஜேம்ஸை பலமாக தாக்கினார். இதனால் நிலைகுலைந்து போன அவர் அதே இடத்தில் விழுந்து இறந்து போனார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வடபழனி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், போலீஸார் வருவதற்குள் ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இறந்த ஜேம்ஸ் உடலை கைபற்றி பிரேத பரிசோதைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ராஜ்குமாரை வடபழனி 100 அடி சாலையில் வைத்து போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in