திடீரென ஊருக்குள் நுழைந்த கரடி: பெண் மீது கொடூரத் தாக்குதல்

திடீரென ஊருக்குள் நுழைந்த கரடி: பெண் மீது கொடூரத் தாக்குதல்

அம்பாசமுத்திரம் அருகே கோட்டைவிளைப்பட்டி கிராமத்தில் வனத்திற்குள் இருந்து ஊருக்குள் நுழைந்த கரடி பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியது. தாக்குதலுக்கு உள்ளான பெண் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம், பாபநாசம் மலையடிவாரத்தில் உள்ள கிராமம் தான் கோட்டைவிளைப்பட்டி. அடர் வனப்பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்திலும், அதை ஒட்டிய தனியார் விவசாய நிலங்களிலும் கரடி, மிளா, யானை உள்ளிட்ட காட்டு மிருகங்கள் புகுவதும், விவசாய விளைபயிர்களை சேதப்படுத்துவதும் காலம், காலமாக தொடர்ந்து வருகிறது. வனப்பகுதிக்குள் மின்வேலி, அகழி போன்றவற்றை தங்கள் ஊருக்குள் வன விலங்குகள் புகுந்துவிடாத வண்ணம், அமைக்கக்கோரிய அப்பகுதி மக்களின் கோரிக்கையும் நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது.

இந்நிலையில், இன்று காலையில் வனத்திற்குள் இருந்து கோட்டைவிளைப்பட்டி கிராமத்திற்கு கரடி ஒன்று புகுந்தது. அங்குள்ள தெற்குத் தெருவில் ஒய்யார நடைபோட்ட கரடி, ராஜதுரை என்பது மனைவி கலையரசி(40) என்பவரைக் கடித்ததோடு, தாக்கவும் செய்தது. அவர் அலறி சப்தம் போடவே அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து கரடியை விரட்டினர். இதில் படுகாயம் அடைந்த கலையரசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே வனத்திற்குள் இருந்து ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வரும் கரடியை, வனத்துறையினர் கூண்டுவைத்து பிடித்து வனத்திற்குள் விடவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in