செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது வெடித்தது பேட்டரி: முகம் சிதைந்து முதியவர் பலி

செல்போன் பேட்டரி வெடித்து முதியவர் பலி
செல்போன் பேட்டரி வெடித்து முதியவர் பலிசெல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போது வெடித்தது பேட்டரி: முகம் சிதைந்து முதியவர் பலி

சார்ஜ் போட்டுக் கொண்டே செல்போனில் பேசிக்கொண்டிருந்த முதியவர், பேட்டரி வெடித்து உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகரைச் சேர்ந்தவர் தயராம் பரோட்(28). அவருக்கு அவரது நண்பர் செல்போனில் நேற்று இரவு அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவரது செல்போனுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. தயராம் பரோட்டுடன் வெளியூருக்குச் செல்ல வேண்டிய அந்த நண்பர், பட்நகரில் உள்ள பரோட் வீடிற்குச் சென்று பார்த்தார். அப்போது தயராம் பரோட் வீட்டிற்குள் இறந்து கிடந்தார். அவரது முகம், மற்றும் தலைப்பகுதியில் காயங்கள் இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நண்பர், உடனடியாக பத்நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்த பார்த்த போது, தயராம் பரோட் அருகே செல்போன் பேட்டரி வெடித்துக் கிடந்தது. அத்துடன் செல்போனும் சேதமாகியிருந்தது. செல்போனில் சார்ஜ் போட்டவாறே பேசிய போது பேட்டரி வெடித்து பரோட் இறந்திருக்கலாம் என்று பத்நகர் காவல் நிலைய அதிகாரி மணீஷ் மிஸ்ரா தெரிவித்தார். இதையடுத்து தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர்.

தயராம் பரோட் வீட்டின் அருகே உயர் அழுத்த மின்கம்பம் செல்வதால், மின் சப்ளை அதிகமாகி பேட்டரி வேடித்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in