பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளி:  சாமியார் சொன்னதால் பரிகார பூஜை என மனைவியை டார்ச்சர் செய்த கணவன்

பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக நீர்வீழ்ச்சியில் குளி: சாமியார் சொன்னதால் பரிகார பூஜை என மனைவியை டார்ச்சர் செய்த கணவன்

ஆண் குழந்தை பிறக்க சாமியார் சொன்னபடி மனைவியை நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாகக் குளிக்கச் சொன்ன கணவன் உள்பட நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண்ணுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. வரதட்சணைக் கேட்டு அந்த பெண்ணை கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். அத்துடன் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அந்த குடும்பத்தினர் கோலாப்பூரைச் சேர்ந்த சாமியரைச் சந்தித்துள்னர். அப்போது, பொதுமக்கள் முன்னிலையில் நீர்வீழ்ச்சியில் உன் மனைவி நிர்வாணமாக குளித்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று சாமியார் அப்பெண்ணின் கணவனிடம் கூறியுள்ளார்.

இதை நம்பி அந்தப் பெண்ணை ராய்காட் மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அவரது கணவன் மற்றும் குடும்பத்தார் ஞாயிறன்று அழைத்துச் சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை நிர்வாணமாக குளிக்க அவரது கணவன் மற்றும் குடும்பத்தினர் வற்புறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவர்களிடமிருந்து தப்பித்து வந்தார்.

இதன் பின் புனேவின் பாரதி வித்யாபீட காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இதையடுத்து அவரது கணவன், மாமனார், மாமியார், தலைமறைவாக உள்ள சாமியார் மௌலானா பாபா ஜமாதர் ஆகியோர் மீது போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாத் கலாஸ்கர் கூறுகையில், " அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது பெற்றோர், சாமியார் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறோம். கொடூரமான செயலில் ஈடுபட்ட இவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவோம்" என்றார். இந்த சம்பவம் புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in