முந்தும் ஜியோ; தொடர் சரிவில் வோடோபோன்

இந்திய செல்ஃபோன் சந்தாதாரர்கள் மத்தியில் கிடுகிடு மாற்றம்!
முந்தும் ஜியோ; தொடர் சரிவில் வோடோபோன்

இந்திய செல்ஃபோன் சந்தாதாரர்கள் மத்தியில் ஜியோ தொடர்ந்து முன்னிலை வகிக்க, வோடோபோன் ஐடியா நிறுவனம் பெரும் சரிவை கண்டுள்ளது.

2022, நவம்பர் மாதம் வரையிலான தரவுகளின் அடிப்படையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது இதனை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனமாக, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ ஏறுமுகத்தில் நடைபோட்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் புதிய சந்தாரர்களை ஜியோ சேர்த்துள்ளது.

அடுத்த இடத்தில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை பார்தி ஏர்டெல் நவம்பரில் சேர்த்துள்ளது. இவர்களுக்கு எதிர் திசையில் தொடர் சரிவு கண்டு வரும் வோடோபோன் ஐடியா நிறுவனம், நவம்பரில் மட்டும் சுமார் 18 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. அதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் மட்டும் இந்த நிறுவனம் சுமார் 35 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. இந்த வகையில் தொடர்ந்து 20வது மாதமாக வோடோபோன் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த அறிவிக்கையின்படி, நவம்பர் மாதத்தில் இந்தியாவில் செல்ஃபோன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 114.30 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in