ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ்: மேற்கு வங்கத்தில் புதிய முயற்சி

ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ்: மேற்கு வங்கத்தில் புதிய முயற்சி

ஓய்வூதியர்களுக்கான வாழ்நாள் சான்றிதழை வீட்டுக்கே சென்று வங்கிகள் சரிபார்க்க வேண்டும் என, வங்கிகளிடம் மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டது. இதனைத் தொடர்ந்து இனி வாழ்நாள் சான்றிதழ்களை வங்கிகள், வீட்டுக்கே சென்று சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில், வீட்டு வாசலுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வாழ்க்கைச் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக, மேற்கு வங்கத்தில் உள்ள வங்கி பிரதிநிதிகள், ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக செல்வார்கள்.

முன்னதாக, ஓய்வூதிய வாழ்நாள் சான்றிதழ்களைப் பெற மூத்த குடிமக்கள் வங்கிகளுக்கு அல்லது காணொலி மூலமாக வரவேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், தற்போது அவர்களின் வருகையை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும் என

மேற்கு வங்க அரசாங்கம் வங்கிகளிடம் வலியுறுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in