
சென்னை அண்ணாநகரில் வீட்டில் இருந்து இரண்டு கை துப்பாக்கிகள், 12 தோட்டாக்களை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் ஐந்தாவது அவென்யூவை வசித்து வந்தவர் வினிதா குப்தா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா கிளையில் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடந்த ஏழு வருடமாக வாங்கிய கடனை கட்டாமல் தற்போது ஒரு கோடி ரூபாய் அளவிற்கு நிலுவையில் உள்ளது.
அக்டோபர் மாதம் வங்கியின் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் நோட்டீஸ் கொடுத்தும் அவர் பணத்தை திரும்ப கட்டவில்லை. இதனால் பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள், வினிதா குப்தாவின் வீட்டை ஜப்தி செய்தனர். அப்போது வீட்டில் இரண்டு துப்பாக்கிகள்,12 தோட்டாக்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அண்ணாநகர் காவல் நிலையத்தில் அந்த துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிகள் உரிமம் இல்லாமல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பிஹார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பயன்படுத்தும் ஹை துப்பாக்கிகள் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.