குறடை வைத்து கொள்ளையனை விரட்டியடித்த வங்கி மேலாளர்: வீரப் பெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்!

குறடை வைத்து கொள்ளையனை விரட்டியடித்த வங்கி மேலாளர்: வீரப் பெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்!

ராஜஸ்தானில், கையில் கத்தியுடன் மிரட்டிய வங்கிக்கொள்ளையனை, வெறும் குறடை மட்டும் வைத்து விரட்டியடித்த வங்கி மேலாளர் பூனம் குப்தாவுக்குப் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள மருதரா வங்கியில், முகமூடிக் கொள்ளையன் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். கையில் கத்தி வைத்திருந்த அந்தக் கொள்ளையர், அங்கிருந்தவர்களைத் தாக்க முயற்சித்ததுடன், பணத்தை எடுத்துத் தருமாறும் மிரட்டினார். அப்போது அந்த வங்கியின் மேலாளரான பூனம் குப்தா அந்தக் கொள்ளையனைத் தடுக்க முயற்சித்தார். வங்கி ஊழியர்களும் கொள்ளையனை எதிர்த்து நின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், பூனம் குப்தாவுடன் வாக்குவாதம் செய்தபடி அவரைக் கத்தியால் குத்த முயற்சித்தார். எனினும், கொஞ்சம் கூட அஞ்சாத பூனம் குப்தா கொள்ளையனுக்குப் பதிலடி கொடுக்க முற்பட்டார். எதிர்ப்பு அதிகமாவதை உணர்ந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சரின் கூடுதல் தனிச்செயலர் டாக்டர் பாகீரத் செளத்ரி, ட்விட்டரில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். இணையவாசிகள் பலரும் பூனம் குப்தாவின் துணிச்சலான செயலைப் புகழ்ந்து பதிவிட்டுவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in