கழிவறைக்குள் அடைக்கப்பட்ட காவலாளி; சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

கழிவறைக்குள் அடைக்கப்பட்ட காவலாளி; சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரத்தில் வங்கி காவலாளியைக் கட்டிப்போட்டு சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இன்று அதிகாலை வங்கிக்கு சில மர்ம நபர்கள் கடப்பாறை, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அந்த வங்கியில் அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்த ஆபேல் (65) இரவு நேர பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவரை மர்ம நபர்கள் திடீரென்று கட்டையால் சரமாரியாகத் தாக்கினார். இதில் ஆபேல் படுகாயமடைந்தார். அத்துடன் அவரை கயிற்றால் கட்டி அருகே உள்ள கழிவறைக்குள் மர்மநபர்கள் அடைத்து வைத்தனர். இதன் பின் வங்கியின் பின்புறம் இருந்த சுவரை இடித்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால், அவர்களால் சுவரை துளையிட முடியவில்லை. நீண்ட நேரம் முயற்சியும் அவர்கள் முயற்சி தோல்வியடைந்தது. இதனால் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதன் பின் வங்கிக்கு வந்த அப்பகுதி மக்கள், கழிவறையில் அடைக்கப்பட்ட ஆபேலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in