40 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை: சரவண பவன் நிலத்தை ஜப்தி செய்து வங்கி அதிரடி!

40 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை: சரவண பவன் நிலத்தை ஜப்தி செய்து வங்கி அதிரடி!

வங்கியில் நிலத்தை அடமானம் வைத்துப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் சரவண பவன் ஓட்டலுக்குச் சொந்தமான நிலம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான உணவகமாகச் சரவண பவன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு இந்தியா மட்டும் அல்லாது கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கிளைகள் உள்ளன. சரவண பவன் நிறுவனத்திற்குச் சொந்தமாகச் சென்னை கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 7.5 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து சுமார் 25 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. அந்த கடனுக்கான வட்டியும், அசலும் செலுத்தப்படாமல் இருந்த காரணத்தால், வட்டியுடன் சேர்த்து 40 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என வங்கி சார்பில் அந்த நிறுவனத்திற்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் அந்த நிறுவனம் தொடர்ந்து வட்டி மற்றும் அசலை செலுத்தாத காரணத்தால், வங்கி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சரவண பவன் நிறுவனத்திற்குச் சொந்தமான 7.5 கிரவுண்ட் நிலத்தை ஜப்தி செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த நிறுவன ஊழியர்களுக்கு இது குறித்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் சரவண பவன் நிறுவனம் சார்பில் கடனை செலுத்துவதற்கு முன்வரவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தில் போடப்பட்ட செட்டுகளை அகற்றச் சொல்லிப் பூட்டி சீல் வைத்துள்ளனர். அதற்கு முன்பாக அங்குத் தங்கியிருந்த வெளிமாநில ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in