சட்டென்று மாறிய வானிலை... சென்னைக்கு திருப்பி விடப்பட்ட பெங்களூரு விமானங்கள்!

பெங்களூரு விமானநிலையம்
பெங்களூரு விமானநிலையம்

பெங்களூருவில் பெய்த கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கு  தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன.

தென் மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அதனை குறைக்கும் வகையில் தற்போது பல பகுதிகளிலும் கோடைமழை பெய்து வருகிறது. மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில்  மழை பெய்து மக்களைக் குளிர்வித்து வருகிறது.

நேற்று பகலில் கர்நாடகா தலைநகரான  பெங்களூரு நகரில் 93.56 சதவீதம் வெப்பம் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக  மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால்,  மாலையில் திடீரென்று மேகங்கள் சூழ்ந்து  மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். 

இந்தநிலையில்  பலத்த கனமழை, மற்றும் மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் பலவும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

ஐந்து வெளிநாட்டு விமானங்கள், எட்டு உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு கார்கோ விமானம் ஆகியவை  சென்னையில் தரையிறங்கின. பின்னர் வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த விமானங்கள் சென்னையில் இருந்து பெங்களுரூவுக்கு புறப்பட்டுச் சென்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in