உபி உட்பட 5 மாநிலங்களில் பேரணி, கூட்டம் நடத்த தடை!

கரோனாவால் தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடு
அகிலேஷ் யாதவ் பிரச்சாரம்
அகிலேஷ் யாதவ் பிரச்சாரம்twitter

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற உள்ள 5 மாநிலங்களில் ஜனவரி 22-ம் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நாட்டில் கரோனா 3-வது அலை அதிக அளவில் பரவிவரும் நிலையில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது.

கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மணிப்பூரில் 2 கட்டங்களாகவும், உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜனவரி 15-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், 5 மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 22-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. மேலும், அதிகபட்சமாக 300 நபர்கள் அல்லது 50% இருக்கையுடன் உள் அரங்குகளில் கூட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in