டெல்லியில் வெளிமாநில டாக்ஸிகள் நுழைய தடை - காற்று மாசுபாட்டால் நடவடிக்கை!

டெல்லியில் காற்று மாசு
டெல்லியில் காற்று மாசு
Updated on
2 min read

ஆப்கள் மூலமாக சேவை வழங்கும் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மற்ற மாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டி வருகிறது. காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமான புள்ளிகளை எட்டியுள்ளது. டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 9 முதம் 18 ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கடும் காற்று மாசு காரணமாக நவம்பர் 10 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது குளிர்கால விடுமுறை அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை வழக்கமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல இந்த முறையும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றதக்கதாக அல்லாத காற்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் டெல்லியில் கடந்த வாரம் முழுவதும் 400ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியிருந்தது. இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நிலைமையை சமாளிக்க லோதி சாலை பகுதியில் டெல்லி மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க பிஎஸ் 3 மற்றும் பிஎஸ் 4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in