வெளிநாடுகளுக்கு இனி ஸ்வீட் கொண்டு செல்ல முடியாது... சென்னை விமான நிலையத்தில் திடீர் தடை!

இனிப்பு பலகாரங்கள்
இனிப்பு பலகாரங்கள்

தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இனிப்பு பலகாரங்களைக் கொண்டு செல்ல சுங்கத்துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலைக்கு சென்றுள்ள தமிழர்களும், புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழும் தமிழர்களும் தங்கள் பாரம்பரியத்தை எப்படி மறக்காமல் இருக்கிறார்களோ, அதே போல தங்கள் பலகாரங்களையும் அவர்கள் மறப்பதில்லை.  தமிழ்நாட்டில் இருந்து தாங்கள் இருக்கும் நாட்டுக்கு வரும் தமிழர்களிடம் அவர்கள் கொண்டு வரச் சொல்வது தங்கள் ஊர் பலகாரங்களைத் தான். 

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் தங்கள் உடமைகளின் எடையை விட உறவினர்களுக்கு கொண்டு செல்லும் பலகாரங்களின் எடை அதிகம் இருப்பது வாடிக்கை.  இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து இனிப்பு பலகாரங்களைக் கொண்டு செல்ல சுங்கத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு காரணங்களுக்காக இனிப்புகளுக்கு தடை என அதிகாரிகள் கூறுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இதனைப் போலவே இலங்கைக்கு செல்லும் விமானங்களில் லுங்கி, வேட்டி மற்றும் சேலை போன்றவற்றையும் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளதாகவும் பயணிகள் கூறியுள்ளனர்.

பலகாரங்கள், உடைகள் என ஒட்டு மொத்தமாக தமிழர்களின் பாரம்பரியத்திற்கே சுங்கத்துறை தடை விதித்திருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in