எல்லாம் போச்சா? தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை; அமைச்சர் அதிரடி அறிவிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!

பட்டாசு
பட்டாசு

டெல்லியில் அதிகளவிலான காற்றின் மாசுவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு
பட்டாசு

டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு யாருக்குமே உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை பாதுகாப்பதும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in