வகுப்பறையில் இடிந்து விழுந்த பால்சீலிங்; காயத்துடன் உயிர் தப்பிய மாணவிகள்: தனியார் பள்ளியில் நடந்த சோகம்

வகுப்பறையில் இடிந்து விழுந்த பால்சீலிங்; காயத்துடன் உயிர் தப்பிய மாணவிகள்: தனியார் பள்ளியில் நடந்த சோகம்

பிரபல தனியார் பள்ளி வகுப்பறையில் பால்சீலிங் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி சீத்தாராம்நகரில் டிஏவி பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 1-ம் வகுப்பறையில் உள்ள பால் சீலிங் திடீரென பெயர்ந்து அந்த வகுப்பில் படிக்கும் மாணவி ஷாபானா(6), மாணவன் தர்ஷன்(5) ஆகியோர் தலையில் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். படுகாயமடைந்த இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்த வேளச்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in