பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!

பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!

2022-ம் ஆண்டுக்கான சாகித்ய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரை உள்ளிட்டவைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, `தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் காளிமுத்துவுக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 22 பிராந்திய மொழி படைப்புகளுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதை காளிமுத்து பெறுகிறார்.

தமிழில் மல்லிகாவின் வீடு என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் 50 ஆயிரம் ரொக்கம், விருது வழங்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in