பஜ்ரங் தள் தொண்டர் படுகொலை: கர்நாடகத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் பதற்றம்!

பஜ்ரங் தள் தொண்டர் படுகொலை: கர்நாடகத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் பதற்றம்!
மாதிரிப் படம்

கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த பஜ்ரங் தள் தொண்டரான ஹர்ஷா (26), நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார்.

நேற்று சிலர் அவரைத் துரத்திச் சென்று கத்தியால் குத்தியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. படுகாயமடைந்த அவர் மெக்கன் சேர்க்கப்பட்டதாகவும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. ஷிவமோகா நகரின் சீகெஹட்டி பகுதியில் ஏராளமான வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். போராட்டக்காரர்களைத் தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.

பஜ்ரங் தள் தொண்டர் கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டதாகவும் இன்று பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in