மதுரையில் கனியாமூர் பள்ளி நிர்வாகிகள்; சேலத்தில் ஆசிரியைகள்: ஜாமீனில் வெளியே வந்தவர்களுக்கு நிபந்தனை

மதுரையில் கனியாமூர் பள்ளி நிர்வாகிகள்; சேலத்தில் ஆசிரியைகள்: ஜாமீனில் வெளியே வந்தவர்களுக்கு நிபந்தனை

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் ஜாமீனில் வெளிவந்தனர்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் சிறையில் இருக்கும் பள்ளி தாளாளர், முதல்வர், செயலாளர், இரண்டு ஆசிரியைகள் ஆகியோர் தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனியாமூர் தனியார் பள்ளியின் செயலாளர் சாந்தி, ஆசிரியைகள் ஹரிபிரியா, கிருத்திகா ஆகியோர் இன்று காலை சிறையிலிருந்து வெளியே வந்தனர். இதுபோல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கர் ஆகியோரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். பள்ளி நிர்வாகிகள் முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் எனவும், ஆசிரியைகள் சேலத்திலேயே தங்கியிருந்து கையெடுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in