இறந்ததாக நினைத்த பெற்றோர்... இறுதிச்சடங்கின் போது இருமிய குழந்தையால் பரபரப்பு!

உயிர் பிழைத்த குழந்தை.
உயிர் பிழைத்த குழந்தை.
Updated on
2 min read

உயிர் இழந்ததாக நினைக்கப்பட்ட ஒரு வயது குழந்தை மீண்டும் உயிர் பெற்ற அதிசயம் பாகல்கோட்டில் நடைபெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம், பாகல்கோட் மாவட்டம், இலக்கல் நகரைச் சேர்ந்தவர் பசவராஜ் பஜந்திரி. இவரது மனைவி நீலம்மா. இவர்களுக்கு தமயன்னா பஜந்த்ரி என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்த பிறந்ததில் இருந்தே சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தது. அத்துடன் இதயநோய் உள்ளிட்ட பல உறுப்புகள் செயலிழந்ததால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது.

பாகல்கோட்
பாகல்கோட்

இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையை பசவராஜ், நான்கு நாட்களுக்கு முன்பு பாகல்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் குழந்தை பிழைப்பது கடினம் என்று தெரிவித்த மருத்துவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்தனர்.

இதனால் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு பசவராஜ் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது தமயன்னாவிற்கு மயக்கம் ஏற்பட்டதுடன் சுயநினைவும் போனது. இதனால், தங்களது குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர் நினைத்தனர். இதையடுத்து குழந்தை இறந்த செய்தியை தங்களது உறவினர்களுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து பசவராஜ் வீட்டிற்கு உறவினர்கள் வந்தனர்.

குழந்தை
குழந்தை

அத்துடன் குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான வேலையிலும் அவர்கள் இறங்கினர். அப்போது திடீரென குழந்தை இருமியதால், பசவராஜ் உள்ளிட்ட துக்க வீட்டிற்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உயிரிழந்தது என நினைத்த குழந்தை உயிருடன் இருந்ததைக் கண்ட அவரது பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தர்காவுக்கு கொண்டு சென்று பிரார்த்தனை செய்தனர். அத்துடன் இலக்கல் தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தற்போது அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்

இன்று தேசிய சகோதரர்கள் தினம்... அண்ணன் - தம்பியாக பிறந்தவர்களும், வாழ்பவர்களும் கொண்டாட வேண்டிய தினம்!

பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்

அதிர்ச்சி... மினிபேருந்து மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்... பெங்களூருவில் நடந்தது என்ன?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in