
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தரமற்ற உணவு வழங்குவதாக பிசிசிஐ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தரமற்ற உணவு வழங்குவதாக பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சிட்னியில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது மிகவும் குளிர்ச்சியான தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகவும், சாண்ட்விச் மட்டுமே தரப்பட்டதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தரமற்ற உணவு வழங்குவதாக பிபிசிஐ பகிரங்கமாக குற்றம்சாட்டி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.