பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய நிர்வாகிகளை உடனே நியமிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய நிர்வாகிகளை உடனே நியமிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியுடன் காலாவதியாகி விட்டதால, ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் கே.பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஆணையத்துக்கு 2022 டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 2023 மார்ச்சில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டதாகவும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த ஓராண்டாக ஆணையம் செயல்பட வில்லை எனவும், ஆணையத்துக்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2024 ஜனவரி 12ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in