எதிர்க்கட்சித் தலைவர்கள் புடைசூழ யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல்!

எதிர்க்கட்சித் தலைவர்கள் புடைசூழ யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள், மனுத் தாக்கலின்போது யஷ்வந்த் சின்ஹாவுடன் செல்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்க தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி முடிவெடுத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் செயல் தலைவரும், முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமராவும் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது உடன் இருக்கிறார். அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும் ஜார்க்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், உள் துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்துப் பேசவிருக்கிறார். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து அக்கட்சி முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாஜக சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு, ஜூன் 25-ல் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது பாஜகவின் முக்கியத் தலைவர்கள் உடன் இருந்தனர். பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே,பி.நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்களான யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுஹான், மனோகர் லால் கட்டர், பி.எஸ்.பொம்மை, பூபேந்திர படேல், ஹிமந்த பிஸ்வ சர்மா, புஷ்கர் சிங் தாமி, பிரமோத் சாவந்த், என்.பீரேன் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஜூலை 18-ல் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முடிவுகள் ஜூலை 21-ல் வெளியிடப்படவிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in