குழந்தையை காணவில்லை; கணவனுக்கு போன் செய்த மனைவி: பிறந்து ஒரேவாரத்தில் கிணற்றில் கிடந்த சடலம்

குழந்தையை காணவில்லை; கணவனுக்கு போன் செய்த மனைவி: பிறந்து ஒரேவாரத்தில் கிணற்றில் கிடந்த சடலம்

பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், கட்டார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(30). இவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து(30). ரமேஷ் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்தத் தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தனர். கடந்த ஒருவாரத்திற்கு முன்பு இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் இன்று காலையில் ரமேஷ் அதிகாலையில் சீக்கிரமே எழுந்து சேரன்மகாதேவிக்கு சவாரிக்காகத் தன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அவர் சென்றுக்கொண்டு இருக்கும்போது திடீர் என போன் செய்த மனைவி இந்து, தான் தூங்கி முழித்துப் பார்த்தபோது அருகில் தான் வைத்திருந்த குழந்தையைக் காணவில்லை எனச் கூறியிருக்கிறார். உடனே ரமேஷ் திரும்பிவந்தார். குடும்பத்தினர் அலைந்து குழந்தையைத் தேடிய போது ஊர் கிணற்றில் பெண் குழந்தை சடலமாகக் கிடந்தது. போலீசார் இதுதொடர்பாக விசாரித்தபோது இந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார். அப்போதுதான் போலீஸார், இந்து மனநலப்பிரச்சினையில் மருந்து எடுத்துக் கொள்வதையும் உணர்ந்தனர். ஏற்கெனவே இந்தத் தம்பதியினருக்கு 2021-ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையும் தொட்டிலிலேயே மர்மமான முறையில் பிறந்து மூன்றே வாரத்தில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து களக்காடு போலீஸார், மனச்சிதைவுக்கு உள்ளான இந்துவே தன் குழந்தையைத் தூக்கிக் கிணற்றில் போட்டிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in