வீடியோ காலில் மருத்துவர்; பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை செவிலியர்கள்: பறிபோன குழந்தையின் உயிர்

வீடியோ காலில் மருத்துவர்; பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனை செவிலியர்கள்: பறிபோன குழந்தையின் உயிர்

மதுராந்தகம் அருகே, மருத்துவர் இல்லாத போது வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்களால் குழந்தை இறந்து விட்டதாகக் கூறி உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அருகே உள்ள ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி(36). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீஷியனாக  பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா(33) இரண்டாவதாகக் கருத்தரித்து இருந்த நிலையில், பிரசவ தேதியை மருத்துவர்கள் நேற்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று சூணாம்பேடு, இல்லீடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளார். பிரசவ வலி காரணமாக நேற்று மதியம் 2.30க்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில், செவிலியர்கள் மட்டுமே மூன்று பேர் அங்கு இருந்துள்ளனர்.

புஷ்பா சமீபத்தில் செய்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரசவத்தில் பிரச்சினை உள்ளது எனக் குறிப்பிட்டு இருந்துள்ளது. இதனைச் செவிலியர்கள் சரிவர கவனிக்கவில்லை எனத் தெரிய வருகிறது. இதையடுத்து இங்கேயே சுகப்பிரசவம் பார்த்து விடலாம் எனச் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். மாலை 6 மணிக்கு அவரின் பிரசவத்தின் போது, குழந்தையின் கால்கள் மட்டுமே வெளியே வந்துள்ளது. செய்வதறியாது தவித்த செவிலியர்கள், மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து தகவலைத் தெரிவித்தனர். அப்போது, வீடியோ கால் மூலம் பிரசவத்தைச் செய்யும்படி மருத்துவர் கூறியுள்ளார். 

மருத்துவரின் ஆலோசனைப்படி செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை, வரும் வழியிலேயே இறந்து பிறந்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியம் காரணமாகக் குழந்தை இறந்ததாகச் சொல்லி குழந்தையின் உடலைப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக திரண்ட உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டம், அதிகாரிகளின் பேச்சு வார்த்தையால் கைவிடப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in