செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற கர்ப்பிணிக்குப் பெண் குழந்தை!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற கர்ப்பிணிக்குப் பெண் குழந்தை!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் மகளிர் பிரிவில் நிறைமாத கர்ப்பிணி ஹரிகா கலந்து கொண்டார். செஸ் போட்டியில் ஒரே இடத்தில் அமர்ந்து கவனத்துடன் விளையாட வேண்டும். ஆனால் ஹரிகா கர்ப்பிணி என்பதால், அவருக்கு என பிரத்தியேக இருக்கையைத் தமிழக அரசு ஏற்பாடு செய்து இருந்தது. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஹரிகா வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டி நிறைவடைந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹரிகா, “ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்து சாதித்ததால், இது உணர்வுப்பூர்வமாக உள்ளது. ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது என்பதாலும், நல்ல உடல்நலத்துடன் இருந்ததாலும் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் இந்த போட்டிகளில் கலந்து கொண்டேன்.

இதற்காக வளைகாப்பு செய்துகொள்ளவில்லை. பல்வேறு கொண்டாட்டங்களையும் தவிர்த்தேன். எல்லா கொண்டாட்டமும் பதக்கம் வென்றபிறகுதான் என முடிவெடுத்திருந்தேன். தற்போது இந்திய மகளிர் அணி முதல்முறையாக ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது” என மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்குப் பெண் குழந்தை பிறந்ததாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் ஹரிகா. அவரது ரசிகர்கள் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in