இனி குழந்தைக்கும் ‘பெர்த்’: வடக்கு ரயில்வே வழங்கும் அன்னையர் தினப் பரிசு!

இனி குழந்தைக்கும் ‘பெர்த்’: வடக்கு ரயில்வே வழங்கும் அன்னையர் தினப் பரிசு!

பொதுவாகக் கைக்குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்யும் தாய்மார்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரும். கீழ் பெர்த் கிடைத்தாலும் குழந்தையை அதில் படுக்கவைத்து உறங்கச் செய்வது சவாலாகவே இருக்கும். இனி அந்தச் சிரமங்கள் இருக்காது என்கிறது வடக்கு ரயில்வே. ஆம், வடக்கு ரயில்வேயின் லக்னோ பிரிவும் டெல்லி பிரிவும் இணைந்து அன்னையர் தினத்தன்று (மே 8) ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கின்றன.

லக்னோ மெயில் (12230) ரயிலின் த்ரீ டையர் ஏசி கோச்சில் பெர்த் எண் 12 மற்றும் 60-ல் இதற்கான சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கீழ் பெர்த்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த அமைப்பின் பக்கவாட்டில் ஒரு தடுப்புக் கம்பியும் பொருத்தப்பட்டிருக்கிறது. குழந்தை கீழே விழுந்துவிடாத வகையில் அந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து அதிகாரபூர்வமாக ட்வீட் செய்திருக்கும் வடக்கு ரயில்வே, குழந்தைக்கான பெர்த்தின் படங்களையும் வெளியிட்டிருக்கிறது.

கீழ் பெர்த்தின் அடிப்பாகத்தில் மடக்கிய வகையில் பொருத்தப்பட்டிருக்கும் இந்தச் சிறிய படுக்கையை, தேவையானபோது நீட்டி வைத்துக்கொள்ளலாம்.

தற்சமயம் டிக்கெட் புக்கிங்கைப் பொறுத்தவரை கைக்குழந்தையுடன் வருபவர்களுக்கென தனியாக வகைப்பாடு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், வேறு பெர்த் கிடைத்தவர்கள் டிக்கெட் பரிசோதகரை அணுகி குழந்தைக்கான பெர்த் அமைந்திருக்கும் கீழ் பெர்த்தைக் கேட்டுப் பெற முடியும். இது சோதனை முயற்சிதான். வெற்றியடைந்தால் அனைத்து ரயில்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.

Related Stories

No stories found.