சென்னை ஐஐடியில் தாெடரும் தற்கொலைகள்: பி.டெக் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி சென்னை ஐஐடியில் தாெடரும் தற்கொலைகள்: பி.டெக் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்

சென்னை ஐஐடியில் மூன்றாம் ஆண்டு பி.டெக் படித்துவந்த மாணவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். செமஸ்டர் தேர்வுகள் நடக்கவிருப்பதால் இரவு வெகு நேரமாக படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வெகு நேரமாகியும் புஷ்பக் தங்கி இருந்த அறை பூட்டியே கிடந்ததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் அறையில் இருந்து எந்தவிதமான சமிக்கையும் கிடைக்காததால் விடுதி காப்பாளரிடம் கூறியுள்ளனர். அவர் சக மாணவர்களுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

உடனடியாக கோட்டூர்புரம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் புஷ்பக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே வளாகத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in